பிக்பாஸ் 7ல் இப்படியொரு ஜோடியா!! பாவ்னி - அமீருக்கே டஃப் கொடுப்பாங்களோ..
ஸ்டார் விஜய் டிவியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். அக்டோபர் 1 ஆம் தேதி பிக்பாஸ் 7 சீசன் கமல் ஹாசனால் புதிய பரிமானத்தில் ஆரம்பிக்கவுள்ளது.
நிகழ்ச்சிக்கு யார் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என்ற யோசனை பலரிடம் இருந்து வருகிறது. பிக்பாஸ் என்றாலே காதல், ரொமான்ஸ் இருக்ககூடும். அப்படி முதல் சீசனில் இருந்து கடைசி சீசன் வரை காதல் ஜோடிகள் உருவாகி அதன்பின் பிரிந்துவிடுகிறார்கள்.
ஆனால் கடந்த 5 சீசனில் கலந்து கொண்ட அமீர், பாவ்னி ஜோடி மட்டும் ரியலாகவே காதலித்து திருமணமும் செய்யவுள்ளார்கள். அப்படியொரு ஜோடியை தான் தற்போது பிக்பாஸ் 7 சீசனில் கலமிரக்கவுள்ளார்கள்.
அதாவது விஜய் டிவியில் விஜேவாக பணியாற்றி வரும் ரக்ஷன் மற்றும் ஜாக்குலின் தான் கலந்து கொள்ளவுள்ளார்களாம்.
இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் ரக்ஷனுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்ற உண்மையும் வெளியாகியது.
தற்போது இவர்கள் உள்ளே போவது குறித்து ரசிகர்கள் கண்டபடி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.