இந்தவாரமும் டபுள் எவிக்‌ஷன்!! அன்ஷிதாவை தொடர்ந்து பிக்பாஸ் 8க்கு பாய் சொன்னது இவர்தான்!!

Vijay Sethupathi Bigg Boss Bigg Boss Tamil 8
By Edward Dec 28, 2024 12:30 PM GMT
Report

பிக் பாஸ் சீசன் 8 

பிக் பாஸ் சீசன் 8 கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய நிலையில், 83 நாட்களை கடந்துள்ளது. 23 போட்டியாளர்கள் வீட்டிற்குள் வந்தாலும், மக்களிடையே அதிகம் கவனம் ஈர்த்தவர்கள் மட்டுமே வீட்டிற்குள் தற்போது உள்ளனர்.

இந்தவாரமும் டபுள் எவிக்‌ஷன்!! அன்ஷிதாவை தொடர்ந்து பிக்பாஸ் 8க்கு பாய் சொன்னது இவர்தான்!! | Biggbosstamil8 Anshitha Jeffry Evicted

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள், போட்டியாளர்களின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் வந்தனர். இதனால் போட்டியாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் இது மகிழ்ச்சியான வாரமாகவே சென்றது.

12 போட்டியாளர்களில் இந்த வாரம் 7 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்ட நிலையில், இந்த வாரம் வெளியேறியுள்ள போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து அன்ஷிதா வெளியேறியுள்ளார்.

டபுள் எவிக்‌ஷன்

83 நாட்களை கடந்து பிக் பாஸ் வீட்டிற்குள் கடுமையாக போட்டியிட்ட அன்ஷிதா, இந்த வாரம் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்று வெளியேறியுள்ளார்.

அவரை தொடர்ந்து ஜெப்ஃரியும் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறியிருக்கிறாராம். தொடர் டபுள் எவிக்‌ஷனால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி.

Gallery