உடம்பைத்தான் பாக்குறாங்க..குழந்தை பெற்றப்பின் கொந்தளித்த நடிகை பிபாஷா பாசு

Pregnancy Indian Actress Actress Bipasha Basu
By Jai Sep 07, 2026 04:30 AM GMT
Report

பிபாஷா பாசு

பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, சமீபத்தில் குழந்தை பெற்றப்பின் உடல் எடை கூடியதை வைத்து சோசியல் மீடியாகளில் பாடி ஷேமிங், ட்ரோல்களுக்கு ஆளாகினார். தன்மீது வீசப்பட்ட இந்த கொடூரமான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் பிபாஷா பாசு.

உடம்பைத்தான் பாக்குறாங்க..குழந்தை பெற்றப்பின் கொந்தளித்த நடிகை பிபாஷா பாசு | Bipasha Basu Slams Body Shamers Post Pregnancy

அதில், இந்த சமூகம் பெண்களின் உடலை பார்க்கும் விதம் மிகவும் விசித்திரமாக இருக்கிறது. ஒரு பெண், குழந்தை பெற்றெடுத்த உடனே, என்னவோ மந்திரவாதி போலத்தான் 40 வயதிலும், 20 வயதில் இருந்தது போன்ற ஸ்லிம்மான உடலமைப்பிற்கு திரும்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் 20 வயது பெண்ணிடம் என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதையே 40 வயது பெண்ணிடமும் எதிர்பார்ப்பது எவ்விதத்தில் நியாயம்?

குழந்தை பிறந்தப்பின் சட்டென பழைய நிலைக்கு மாறாத பெண்கள் மிகமோசமான ட்ரோகளை சந்திக்கிறார்கள். என் மகள் தேவி பிறந்தப்பின் நானும் இந்த மிக கொடூரமான, தங்கிக்கொள்ள முடியாத பாடி ஷேமிங், ட்ரோல்களை அனுபவித்தேன். நான் வெளியில் செல்லும்போது கேமராமேன்கள் என்னை விசித்திரமான கோணங்களில் புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் பரப்பினார்கள்.

உடம்பைத்தான் பாக்குறாங்க..குழந்தை பெற்றப்பின் கொந்தளித்த நடிகை பிபாஷா பாசு | Bipasha Basu Slams Body Shamers Post Pregnancy

ஒரு தாய் தன் குழந்தையை வளர்க்க, தாய்மைக்கு மாற எவ்வளவு கஷ்டப்படுகிறாள் என்று யாருக்கும் கவலையில்லை, எல்லாரும் உடனே பழைய பிபாஷாவாக மாற வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறார்கள். தாய்மை என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக அழகான தருணம், அதில் ஏற்படும் உடல்மாற்றங்களை கேலி செய்யாமல் அவர்களை கொண்டாட வேண்டும் என்று ஆதங்கத்துடன் பிபாஷா பாசு தெரிவித்துள்ளார்.