கேரவனில் நடிகைகள்..விஜய்யை வீழ்த்த நினைப்பது அடிமுட்டாள்தனம்!! பிரபலம் ஓபன் டாக்..
TVK விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூரில் பிரச்சாரம் நடத்தியபோது கூட்டல் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் தற்போது வரை மிகப்பெரியளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதிலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சில மணிநேரத்திலேயே விமானத்தில் ஏறி சென்றதும் பேசுபொருளாக மாறியது. இதனையடுத்து சினிமா நட்சத்திரங்களும் விஜய்யை கண்டித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

பத்திரிக்கையாளர் பிஸ்மி
அந்தவகையில் போக்கிரி படத்தின்போது தன்னை விஜய் அவமானப்படுத்தியதாக கூறி நடிகர் நொப்போலியன் பேட்டியளித்ததை வைத்து கேரவனில் நடிகைகளை ஒப்பிட்டு பேசுவது, தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி, விளக்கம் கொடுத்துள்ளார்.
கேரவனில் நடிகைகள்
அதில், கேரவன் என்பது விஜய்யிடம் மட்டும் தானா இருக்கு, எல்லா நடிகர்களிடமும் இருக்கிறது. நடமாடும் அறை தான் கேரவன். நெப்போலியன் விவகாரம் என்னன்னு தெரியுமா? யாருக்கும் தெரியாது?.

அப்போதைய காலக்கட்டத்தில் இந்த விஷயத்தை நான் தான் சொன்னேன். இரவு 2 மணிக்கு ஏவிஎம்-ல் நடக்கிறது, அடுத்த நாள் எனக்கு தெரிய வருகிறது. போக்கிரி படத்தில் நெப்போலியன் நடித்தபோது, அவரின் நண்பர் ஷூட்டிங்கிற்கு வருகிறார்.
அப்போது, விஜய் ஷூட்டிங் முடிந்து கேரவனில் இருக்கிறார். ஆடைகளை மாற்றி வீட்டிற்கு கிளம்ப போகிறார். எப்போது கேரவன் உள்ளே ஆர்ட்டிஸ்ட் இருப்பார்கள், அவரின் உதவியாளர்கள் வெளியே இருப்பார்கள்.
அப்போது நெப்போலியன் நண்பரை கூட்டிகிட்டு, கேரவனை திறக்க முற்படுகிறார், அப்போது உதவியாளர் தடுக்கிறார். நெப்போலியன் மூளை சூடெடுத்தவர் தான், ஒரு பண்ணையார் போல் பேசுவார், அப்போது அந்த உதவியாளரை ஆபாசத்தில் திட்ட ஆரம்பித்துள்ளார். உள்ளே இருந்த விஜய்க்கு இந்த சத்தம் கேட்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது நெப்போலியன் விஜய்யை இதுபற்றி கோபத்தில் கேட்டுள்ளார். உடனே விஜய், எப்படி என் உதவியாளரை திட்டலாம், என் அசிஸ்டண்ட், நான் சொல்லி தான் அதை செய்கிறார், எதுவாக இருந்தாலும் என்னிடம் தானே சொல்லி இருக்க வேண்டும், எதுக்கு அவனை கேட்கிறீர்கள். அப்போது சின்ன கூட்டம் கூடுகிறது, அதுவும் ஷூட்டிங்கில் இருந்தவர்கள்தான்.

அப்படி பலர் முன் விஜய் அப்படி பேசியது நெப்போலியனுக்கு கோபப்பட்டு போய்விடுகிறார். இந்த விஷயத்தில் விஜய் மீது என்ன தவறு, தன்னுடைய ஊழியரை மற்றவர்கள் எப்படி திட்டமுடியும் என்பதால் அப்படி கேட்டார், அவர் மீது என்ன தவறு. அதை நான் செய்தியாக்கினேன், அப்போது யாரும் இதைப்பற்றி பேசவில்லை.
விஜய்யை வீழ்த்த நினைப்பது
இன்னைக்கு விஜய்யை காலி செய்ய நெப்போலியன் போன்ற ஆட்களை வைத்து தனிப்பட்ட காரணத்தை வைத்து இந்த கதையை கூறுகிறார்கள். இன்னொரு விஷயம், ஒரு நடிகர் கேரவனில் இருந்தாலே அங்கே ஒரு நடிகை இருப்பார் என்று கூறுவது கேவலமானது, அபத்தமானது.
விஜய்யை விடுங்கள், ஒரு நடிகரை எடுத்துக்கொள்ளுங்கள், ஒரு நடிகன், ஒரு நடிகையுடன் இருக்க வேண்டும் என்றால் கேரவனில் தான் இருக்க வேண்டுமா. அவன் நினைத்தால் வெளிநாட்டுக்கோ, சென்னையில் இருக்கும் ஹோட்டலில் வைத்து இருக்கலாமே. இதை வைத்து விஜய்யை வீழ்த்த நினைப்பது அடிமுட்டாள்தனம் என்று பிஸ்மி தெரிவித்துள்ளார்.