விக்னேஷ் சிவனுக்கு பண வெறி, அதான் நயன்தாரா இப்படி இருக்கிறார்.. விளாசிய பிரபலம்
நயன்தாரா
தமிழ் சினிமாவில் இன்றும் இளம் நடிகைகளுக்கு போட்டியாக வலம் வரும் நயன்தாரா ரசிகர்களால் அன்போடு லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். தற்போது இவர் ராக்காயி என்ற மிரட்டல் ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார்.
சினிமாவை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். சமீபத்தில் இவர் திருமண ஆவணப்படம் தொடர்பாக தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதை தொடர்ந்து, சில சர்ச்சைகளில் மாட்டிக்கொள்ளும் நயன்தாரா குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பிஸ்மி பேட்டி கொடுத்துள்ளார்.
பிஸ்மி பேட்டி
அதில்," நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனுக்கு பண வெறி கண்ணை மறைத்துவிட்டது. நயன்தாராவை பொறுத்தவரை அவருடைய திறமை மற்றும் அறிவை தாண்டி நூறு மடங்கு அதிகமாக சம்பளம் பெருகிறார்.
தயாரிப்பாளர்களும் சற்றும் யோசிக்காமல் அவரை படங்களில் நடிக்க வைத்து அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்கிறார்கள்.
அதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டில் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க சரியான ஹீரோயின்கள் இல்லை. அதனால் தான் இன்று வரை நயன்தாராவின் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது" என்று பேசியுள்ளார்.