அடேய் கூகுள்.. ப்ளூ சட்டை மாறன் படத்தை கேட்டால் நீ என்னத்தை காட்ற

Blue Sattai Maran Anti Indian
By Parthiban.A Dec 14, 2021 04:30 AM GMT
Report

ப்ளூ சட்டை மாறன் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. சினிமாவை விமர்சனம் செய்து அந்த அளவுக்கு இணையவாசிகள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார் அவர். ஆனால் சினிமா துறையினர் அவர் மீது செம கடுப்பில் தான் இருக்கின்றனர். அவரால் வசூல் பாதிக்கிறது என்பது தான் அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு.

ப்ளூ சட்டை மாறன் தற்போது இயக்குனராக ஒரு படம் இயக்கி இருக்கிறார். ஆன்டி இண்டியன் என்ற அந்த படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. அதற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது. அதனை பற்றி சில ட்ரோல்களும் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கூகுலில் ஆன்டி இண்டியன் என தேடினால் வேறு தவறான புகைப்படங்கள் வருகிறதாம். ”அடேய் கூகுள்.. ப்ளூ சட்டை மாறன் படத்தை கேட்டால் நீ என்னத்தை காட்ற” என நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கேட்டு வருகின்றனர்.