பொங்கலில் ரசம் ஊற்றி சாப்பிட்டமாதிரி இருக்கு!! பராசக்தி-ஐ வெச்சு செய்த ப்ளூ சட்டை..
முன்னணி இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள படம் பராசக்தி. இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா என பலரும் நடித்திருந்தனர்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்துள்ள இப்படத்திற்கு ஒரு பக்கம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், மறுபக்கம் கலவையான விமர்சனங்களும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தற்போது படத்தை பார்த்த சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், பராசக்தி படத்தை படுமோசமாக விமர்சனம் செய்துள்ளார்.
பராசக்தி
அதில், பராசக்தி படத்தின் கதை பாலா எடுப்பது மாதிரி ராவான ஒரு கதை, மணிரத்னம் ஸ்டைலில் கொஞ்சம் மசாலா எல்லாம் போட்டு கலர்ஃபுல்லாக எடுப்போம் என்று இயக்குநர் எடுத்துள்ளார். ஹீரோ ஒரு நல்ல ரவுடி, நல்ல ரவுடியை அடக்க கெட்ட போலீஸை கொண்டு வருகிறார்கள்.
அவர் திறமையான அதிகாரி, அவரும் ஹீரோவின் சண்டப்போட, ஹீரோவின் நண்பர் இறக்க, மனமுடைந்த ஹீரோ ரவுடித்தனத்தை விடுகிறார். அதன்பின் தம்பி பெரிய ரவுடியாக, ஹீரோ அதிர்ச்சியாக தம்பியை படிக்கும் வேலையை பார் என கூறுகிறார்.

அண்ணனை தம்பியை வைத்து அண்ணனை போட்டுவிடலாமென்று போலிஸ் பிளான் பண்ண தம்பியை போட்டுவிடுகிறார், இதில் 3 பாட்டு வேற. ஹிந்தி திணிப்பை பற்றி படம் எடுக்கச்சொன்னா, ஹீரோ - வில்லன் படத்தை எடுத்திருக்கிறார். 40 வருட கதையை பத்து பாகங்களாக எடுக்கலாம். இவர்கள் 2 மணிநேரத்துக்குள் சொல்கிறார்கள்.
ஹிந்தியை எதிர்க்கிறார், ஹீரோயினிடம் தெலுங்கு கற்றுக்கொள்கிறார், படத்தில் செயற்கைத்தனங்கள் நிறைய இருக்கிறது. ஆகமொத்தம் இந்த படம் சர்க்கரை பொங்கலில் ரசம் ஊற்றி சாப்பிட்ட மாதிரி இருக்கு என்று படுமோசமாக கலாய்த்து விமர்சித்துள்ளார்.