பாலிவுட் நடிகை பெயரில் பசுமாடு!! ஆலியா பட்டிடம் மன்னிப்பு கேட்ட பிரியங்கா காந்தி..

Alia Bhatt Kerala Priyanka Gandhi
By Edward Oct 09, 2025 12:00 PM GMT
Report

ஆலியா பட்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஆலியா பட் பற்றி காங்கிரஸ் கட்சியின் வயநாடு எம் பி பிரியங்கா காந்தி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளது தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பாலிவுட் நடிகை பெயரில் பசுமாடு!! ஆலியா பட்டிடம் மன்னிப்பு கேட்ட பிரியங்கா காந்தி.. | Bollywood Actress Cow Priyanka Comedy

சமீபத்தில் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் கோடஞ்சேரியில் இருக்கும் பால் பண்ணை ஒன்றை பார்வையிட்டுள்ளார் பிரியங்கா காந்தி.

பசுமாடு

அப்போது, ஆலியா பட் என்று பெயரிடப்பட்ட அழகான பசு ஒன்றை சந்தித்தேன் என்றும் ஆலியா பட் என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறி எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார் பிரியங்கா காந்தி. அவரின் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.