ராஷ்மிகா வாழப்போகும் அரண்மனை.. விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா?
விஜய் தேவரகொண்டா
நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார். இவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
சில தினங்களுக்கு முன் தான் இவர்கள் நிச்சயம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பார்த்துள்ளீர்களா?
இந்நிலையில், தற்போது விஜய் தேவரகொண்டாவின் வீடு, கார் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, ஹைதராபாத்தில் உள்ள ஜூபிலி மற்றும் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள விஜய் தேவரகொண்டாவின் வீட்டின் மதிப்பு ரூ. 15 கோடி இருக்கும்.
இந்த வீட்டின் ஹால் ஏராளமான சூரிய ஒளியை உள்ளே அனுமதிக்கும் வகையில் பெரிய பிரெஞ்சு ஜன்னல்களால் அமைக்கப்பட்டுள்ளது. அறை வடிவமைப்பு ஆடம்பரமாகவும், ஸ்டைலாகவும், அட்டகாசமான தோற்றத்தைக் கொண்டதாகவும் உள்ளது.
மேலும் இந்த வீட்டில் மற்றொரு சிறப்பம்சமாக ஸ்டைலிஷ் படுக்கை அறை அமைந்துள்ளது. தங்க நிற விளக்குகளால் ஜொலிக்கும் இந்த படுக்கை அறையில், மரத்தரை மற்றும் பிரெஞ்சு ஜன்னல்கள் அமைந்துள்ளன.
மேலும், ஃபோர்டு மஸ்டாங் (ரூ. 75 லட்சம்), மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி (ரூ. 60 லட்சத்திற்கு மேல்) இருக்கும், இது போன்று பல கார்களை வைத்துள்ளார்.