பணக்கார குடும்பம்..பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டு மதுவுக்கு அடிமையாகிய பிரபல நடிகை!! 34 வயதில் மரணம்...
நடிகை விமி
1968ல் இயக்குநர் பி ஆர் சோப்ரா இயக்கத்தில் ராஜ் குமார் மற்றும் சுனில் தத் இணைந்து நடித்து வெளியான ஹம்ராஸ் படத்தில் அறிமுகமானார் நடிகை விமி. பாடகியாக பயிற்சி பெற்றிருந்தாலும் நடிகராக வேண்டும் என்ற அவரது முடிவுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் அதை பொருட்படுத்தாத விமி, தன் ஆசைக்கேற்ப திரைத்துறைக்கு சென்றார். பணக்கார குடும்பத்தை சேர்ந்த விமி, முதல் படத்திற்கு பின் மிகப்பெரிய நட்சத்திரமாக மாறினார். ஆனால் அவரது வாழ்க்கையில் விரைவிலேயே ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது. மது பழக்கத்திற்கு அடிமையாகி 34 வயதிலேயே மரணமடைந்தார்.
திருமண வாழ்க்கை
கொல்கத்தாவை சேர்ந்த ஷிவ் அகர்வால் என்ற தொழிலதிபரை மணந்த விமி, அவரது வாரிசுரிமை பறிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஹம்ராஸ் வெற்றிக்கு பின் தன் கணவர், தன்னை வைத்து படத்தை தயாரிக்கப்போவதாகவும், ரங்கீலா, சந்தோஷ், அப்பாயின்ஸ்மெண்ட் போன்ற படங்களில் கையெழுத்திட்டித்தாக பேட்டியொன்றில் விமி கூறியிருக்கிறார்.
ஆனால் கணவர் ஷிவ் தன்னைவிட்டு விலகுவார் என்று அவருக்கே தெரியாமல் போனது. விமி வாழ்க்கை சுழலத் தொடங்கிய போது, கணவரை விட்டு வெளியேற அவரது பெற்றோர் வற்புறுத்தியதால், ஷிவ் உடனான திருமண வாழ்க்கை முறிந்தது.
மேலும் தொழில் ரீதியாக தனக்கு உதவும் என்ற நம்பிக்கையில் ஜாலி என்ற படத்தின் விநியோகஸ்தருடன் விமி வாழத்தொடங்கினார். ஜவுளித் தொழிலை தொடங்கிய விமி, தன் கடன்களை அடைக்க விற்பனை செய்துள்ளார்.
விமி ஒரு ஏழை நடிகை என்ற நற்பெயரை வளர்த்துக் கொண்டதாகவும் அதன் விளைவாக அவருக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கியுள்ளது. இதனால் மது அருந்தத் தொடங்கி, மலிவாக மதுவை அருந்தி இருக்கிறார்.
விமியுடன் தொடர்பில் இருந்து விநியோகஸ்தர், பாலியல் தொழில் செய்ய கட்டாயப்படுத்தியிருக்கிறார். இது விமியின் வாழ்க்கையை மீண்டும் உடைந்த பெண்ணாக மாற்றியது. அதிக மது அருந்தியதால், 1977ல் நானாவதி மருத்துவமனையில் கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு தன்னுடைய 34வது வயதிலேயே இறந்துள்ளார்.