விஜய்யின் கட்சி கொடி... முதல் நாளே வந்த பிரச்சனை!
Vijay
By Parthiban.A
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி, 2026 சட்ட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.
இன்று கட்சியின் கொடி அறிமுக விழா நடைபெற்று இருக்கிறது. கட்சி கொடியை அறிமுகப்படுத்திய விஜய் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
கொடியில் இரண்டு யானைகள் மற்றும் வாகை மலர் ஆகியவை இடம்பெற்று இருக்கின்றன.
முதல் நாளே தொடங்கிய பிரச்சனை
இந்நிலையில் விஜய்யின் கட்சி கொடிக்கு முதல் நாளே பிரச்சனை தொடங்கி இருக்கிறது. தவெக கொடியில் யானை இடம் பெற்று இருப்பதற்கு பகுஜன் சமாஜ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.
யானையை கொடியில் இருந்து நீக்கவேண்டும் என அவர்கள் கேட்டு இருக்கின்றனர். அதற்காக விஜய் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேச இருப்பதாகவும் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியினர் கூறி இருக்கின்றனர்.