அந்த இடத்துக்கெல்லாம் வர முடியாது? பிரபல நடிகரால் கண்டமேனிக்கு எகிறிய பட்ஜெட்..
முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர்கள் புஷ்கர்-காயத்ரி. கணவன் - மனைவி இருவரும் இணைந்து ஓரம்போ, வா கூவாட்டர் கட்டிங் போன்ற படங்களுக்கு பிறகு மாதவன், விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா என்ற படத்தினையும் இயக்கி சூப்பர் ஹிட் படமாக கொடுத்தனர்.
இப்படத்திற்கு பிறகு சுழல் என்ற ஓடிடி வெப் தொடருக்கு கதையாசிரியராகவும் பணியாற்றியுள்ளனர். இந்நிலையில் விக்ரம் வேதா படத்தின் இந்தியில் ரீமேக்கில், பாலிவுட் நடிகர்கள் சைஃப் அலிகான், ஹிரித்திக் ரோஷன், ராதிகா ஆப்தே போன்ற நட்சத்திரங்களை வைத்து இயக்கி வருகிறார்கள்.
ஹிரித்திக் அடம்பிடித்தாரா
படத்தின் பட்ஜெட் 100 கோடி வைத்து எடுக்க கடந்த அக்டோபர் மாதம் முதலே ஆரம்பித்து விட்டனர். தற்போது உத்திரபிரதேசத்தில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்ட நிலையில் அங்கெல்லாம் என்னால் வரமுடியாது. துபாய்க்கு மாற்றுங்கள் என்று அடம்பிடித்துள்ளாராம். இதனல் சுமார் 60 கோடி அளவில் பட்ஜெட் எகிறியுள்ளதாம்.
தயாரிப்பாளர் புலம்பல்
இதையறிந்த விக்ரம் வேதா படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஒரு அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஒரு வருடமளவில் லக்னோவில் தான் படப்பிடிப்பை செய்ய திட்டமிட்டோம்.
ஆனால் கொரோனா காலக்கட்டம் என்பதால் கலைஞர்களின் நலன் கருதி படத்தின் ஷூட் துபாயில் செட் போடப்பட்டு ஷூட் செய்தோம் என்று கூறியுள்ளனர். மேலும் ஹிரித்திக் ரோஷம் தொடர்பான தகவல்கள் பொய்யானது என்று கூறியுள்ளனர்.