இன்ஸ்டாவில் காசு சம்பாதிக்க முடியுமா? ஷாக்கான சைஃப் அலிகானை கூலாக்கிய கரீனா..
சைஃப் அலிகான்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் சைஃப் அலிகான். 55 வயதான சைஃப் அலிகான், முதல் மனைவி அம்ரிதா சிங்குடன் 13 ஆண்டுகள் வாழ்ந்து பின் விவாகரத்து செய்து கரீனா கபூரை 2வது திருமணம் செய்து கொண்டார். சாரா அலிகான் உட்பட 4 குழந்தைகள் சைஃப் அலிகானுக்கு இருக்கிறது.

இந்நிலையில் தி கிரேட் இந்தியன் கபில் ஷோ நிகழ்ச்சியில் கரீனா கபூருடன் கலந்து கொண்டிருக்கிறார் சைஃப் அலிகான். அக்டோபர் 11 ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் முதன்முதலாக சைஃப் அலிகான் இணைந்துள்ளார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய சைஃப், இன்ஸ்டாகிராமில் இணைந்தால் பணம் சம்பாதிக்க முடியும் என்ற காரணத்தினால் இணைந்துள்ளேன் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதற்கு நடிகை அர்ச்சனா பூரன் சிங், இன்ஸ்டாகிராமில் பெண்களைப் போல் உங்களால் பெரியளவில் பணம் சம்பாதிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

அதனால் அதிர்ச்சியான சைஃப் அலிகான், என்னால் இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிக்க முடியாதா? அப்படி என்றால் நான் ஏன் இதில் மெனக்கெட்டு கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
உடனே பக்கத்தில் இருந்த கரீனா கபூரிடம், நீ தானே இன்ஸ்டாகிராமில் சம்பாதிக்கலாம் என்று என்னிடம் சொன்னாய் என்றார். அதற்கு கரீனா, நாம் அதை எப்படி செய்வது என்று பார்த்துக் கொள்ளலாம் என்று சமாளித்து டாப்பிக்கை மாற்றியிருக்கிறார்.