ரூ. 400 கொடுத்து ஏமாந்து போகாதீங்க..சப்ஸ்கிரிப்ஷன் ஆரம்பிக்கல!! ரித்திகா சிங் விளக்கம்..
ரித்திகா சிங்
இறுதி சுற்று, ஓ மை கடவுளே, ஆண்டவன் கட்டளை, வேட்டையன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரித்திகா சிங். குத்து சண்டை வீரராக இருக்கும் ரித்திகா, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வருவார்.
இந்நிலையில் ரித்திகா சிங் பெயரில் போலி சப்ஸ்கிரிப்ஷன் கணக்கு கிரியேட் செய்யப்பட்டுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் காசு பார்க்கிறாரா? ரித்திகா என்ற கேள்வியும் எழுந்தது.

தற்போது அதனை அறிந்த நடிகை ரித்திகா சிங், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விளக்கமான வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
ஏமாந்துபோகாதீங்க
அதில், நான் எந்தவொரு சப்ஸ்கிரிப்ஷனையும் ஆரம்பிக்கவில்லை. தன் ரசிகர்கள் 390 அல்லது 400 ரூபாய் கொடுத்து ஏமாந்துபோக வேண்டாம். ஏஐ ஆபாச வீடியோக்களை பார்த்து நானே ஷாக்காகிவிட்டேன். அவ்ளோ தத்ரூபமாக இருக்கிறது, அதனால் ரசிகர்களே எச்சரிக்கையாக இருங்கள். இதுதான் என்னுடைய ப்ளூ டிக் போட்ட அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் என்று கூறியிருக்கிறார்.