ஸ்கேன் எடுக்கச்சென்ற நடிகை! மறைந்திருந்த படம் எடுத்த மர்ம நபர்

Indian Actress
By Edward May 14, 2022 09:45 AM GMT
Report

நடிகர் கருணாஸ் நடிப்பில் வெளியான அம்பாசமுத்திரம் அம்பானி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை நவ்நீத் கெளர்.

படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் கணவருடன் அரசியலில் நுழைந்து தற்போது எம்பியாக உள்ளார்.

சமீபத்தில் அரசுக்கு எதிராக பேசி சர்ச்சையான போராட்டத்தை நடத்தியதாக கூறி நவ்நீத் மற்றும் அவரது கணவர் ரானாவை கைது செய்தனர்.

பின் ஜாமினில் வெளிவந்த நடிகை நவ்நீத் கெளருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு ஸ்கேன் எடுக்கும் போது நடிகை நவ்நீத் கெளருக்கு தெரியாமல் மர்ம நபர் படம் பிடித்துள்ளார். இதனடிப்படையில் நடிகை புகாரளித்ததில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செது விசாரித்து வருகிறார்கள் போலிசார்.