நிதிக்காக ஆபாச படங்களில் நடித்தார்!! ஸ்வேதா மேனன் மீது பாய்ந்த வழக்கு பதிவு..

Gossip Today Tamil Actress Actress
By Edward Aug 07, 2025 06:30 AM GMT
Report

ஸ்வேதா மேனன்

மலையாளம், தமிழ் மொழிப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்வேதா மேனன், முதலில் பாபி போன்ஸ்லே என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். அதன்பின் 2011ல் ஸ்ரீவல்சன் என்பவரை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தைக்கு தாய் ஆனார். குழந்தைப்பெற்றப்பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்வேதா மேனன்.

நிதிக்காக ஆபாச படங்களில் நடித்தார்!! ஸ்வேதா மேனன் மீது பாய்ந்த வழக்கு பதிவு.. | Case File Against Actress Shwetha Menon Bad Films

இந்நிலையில், ஸ்வேதா மேனன் மீது மார்ட்டின் மெனச்சேரி என்ற சமூக ஆர்வலர், காவல்துறையிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். ரதி நிர்வேதம், களிமண் போன்ற படங்களில் அதிக கவர்ச்சி காட்டி ஸ்வேதா நடித்திருக்கிறார்.

மேலும் ஆணுறை விளம்பரத்திலும் நடித்திருக்கிறார் என்றும் நிதி தேவைக்காக, ஆபாச படங்களில் நடித்திருக்கிறர் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் புகார் மீது போலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.

நிதிக்காக ஆபாச படங்களில் நடித்தார்!! ஸ்வேதா மேனன் மீது பாய்ந்த வழக்கு பதிவு.. | Case File Against Actress Shwetha Menon Bad Films

வழக்கு பதிவு

இதைதொடர்ந்து நீதிமன்றம் சென்ற மார்ட்டின் மனுவை விசாரித்த எர்ணாகுளம் நீதிமன்றம் ஸ்வேதா மேனன் மீது வழக்கு பதிவிட உத்தரவிட்டது. அதன்பின் அவர் மீது ஆபாசத்தை தடுத்தல் மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மலையாள திரைத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும், மலையாள துறையின் நடிகர் சங்கமான AMMA அமைப்புக்கான நிர்வாக குழு தேர்தல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடக்கவுள்ளது. தேர்தலில் சங்க தலைவர் பதவிக்கு ஸ்வேதா மேனன் போட்டியிடவிருக்கிறார். இப்படியொரு நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அவருக்கு தேர்தலில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.