விஜய்யின் கோட் பட நடிகை மீது அடிதடி கேஸ்!! மேல கை வெச்சா இப்படித்தான்..

Parvathy Gossip Today Tamil Actress Actress
By Jai Sep 21, 2024 02:45 PM GMT
Report

தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர்.

அஜித்தின் என்னை அறிந்தால், விஜய்யின் கோட் படங்களில் முக்கிய ரோலில் நடித்துள்ள பார்வதி நாயர் மீது தற்போது சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜய்யின் கோட் பட நடிகை மீது அடிதடி கேஸ்!! மேல கை வெச்சா இப்படித்தான்.. | Case Filed Against Actress Parvathy Nair

பார்வதி நாயர் மீது வழக்கு

கடந்த 2022ல் தனது வீட்டில் இருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடுபோனதாகவும் அதற்கு காரணம் வீட்டில் பராமரிப்பாளராக வேலை பார்த்த சுபாஷ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பார்வதி நாயர் புகாரளித்திருந்தார்.

இந்நிலையில் தன்னை பார்வதி நாயர் உள்ளிட்ட 7 பேர் கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறி பார்வதி நாயர் மீது சுபாஷ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக நெட்டிசன்கள் நடிகை பார்வதி நாயரை தன் வீட்டில் வேலை பார்த்தவர் மீது சந்தேகத்தின் பேரில்தான் புகாரளித்தார்.

சிசிடிவி காட்சிகள் போன்ற ஆதரங்கள் இருந்தால் அதனை காவல் நிலையத்தில் கொடுத்திருக்கலாமே அதைவிட்டு ஆள் வைத்து ஏன் அடிக்கனும் என்று கலாய்த்தபடி கேள்வி கேட்டு வருகிறார்கள்.