மதுப்பழக்கத்திற்கு அடிமை!! கணவர் மீது வழக்கு போட்ட பிரபல நடிகை..
செலினா ஜெட்லி
முன்னாள் மிஸ் இந்தியா அழகியும் பாலிவுட் நடிகையுமான செலினா ஜெட்லி தன்னுடைய கணவர் பீட்டர் ஹாக் மீது குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் புகாரளித்துள்ளார்.

தன் 3 குழந்தைகளை ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த தன்னுடைய கணவர் பீட்டர், சந்திக்க விடாமல் தடுப்பதாகவும், தன்னுடைய வங்கிக் கணக்குகளை நிர்வகிக்க விடாமல் தடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார் செலினா.
மதுப்பழக்கத்திற்கு அடிமையான தன்னுடைய கணவர் தன்னை தொடர்ந்து துன்புறித்தி வந்ததாக குற்றம் சாட்டியுள்ள செலினா ஜெட்லி, அவரிடம் இருந்து பராமரிப்பு தொகையாக மாதம் ரூ. 10 லட்சம் பெற்றுத்தர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் இழப்பீடாக ரூ. 50 கோடியும் தனது கணவர் தரவேண்டும் என்று மும்பை அந்தேரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பீட்டர் ஹாக்கிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.