குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கு!! வெளியான முதல் விமர்சனம்..
குட் பேட் அக்லி
நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குட் பேட் அக்லி. வரும் ஏப்ரம் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள குட் பேட் அக்லி படத்தில் திரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் 2வது சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தின் சென்சார் சமீபத்தில் செய்யப்பட்டது. வெளிநாட்டிற்காக அனுப்ப வேண்டிய பிரிண்ட் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டது.
சென்சார்
படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படம் சிறப்பாக வந்துள்ளது என்று கூறியுள்ளார்களாம். பொதுவாக சென்சாரில் உள்ளவர்கள் சில நல்ல திரைப்படங்களுக்கு மட்டும் தான் இப்படி தங்களது பாராட்டுக்களை தெரிவிப்பார்கள்.
அந்தவகையில் குட் பேட் அக்லி படத்தை பார்த்துவிட்டு சென்சார் குழுவினர் பாசிட்டிவ் விமர்சனம் செய்துள்ளனர். இதனால் ரசிகர்கள் குட் பேட் அக்லி படத்தை பார்க்க ஆவலுடன் இருந்து வருகிறார்கள்.