என்னது இளையராஜா வீட்டுக்கு மருமகளாக வேண்டியவளா!! செய்யாறு பாலு சொன்ன உண்மை..

Ilayaraaja Vanitha Vijaykumar Gossip Today Jovika Vijaykumar
By Edward Jul 13, 2025 05:15 PM GMT
Report

வனிதா

நடிகை வனிதா, ராபர்ட் மாஸ்டர் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான படம் தான் மிஸஸ் அண்ட் மிஸ்டர். வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்துள்ள இப்படத்தின், ஷகீலா, கிரண் ரத்தோட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ராத்திரி சிவராத்திரி என்ற இளையராஜா பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராயல்டி வாங்கவில்லை என்றும் அந்த பாடலை உடனே ஈக்க வேண்டும் என்று கூறி இளையராஜா படக்குழு மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.

இளையராஜா வீட்டுக்கு மருமகளா

இளையராஜாவிடம் இந்த பாடலை பயன்படுத்த தனிப்பட்ட முறையில் பேசினேன், என் மகளுடன் சென்று அவர் காலில் விழுந்தேன். ஓகே என்று தான் இளையராஜா சொன்னார்.

நான் நேரில் சென்று கேட்கும் போதே திட்டி இருக்கலாமே, இப்போ வந்து வழக்கு மட்டும் போடுகிறீர்களே. சின்ன வயதில் நான் அவரது வீட்டில் வளர்ந்திருக்கிறேன், அவர் வீட்டுக்கு நான் மருமகளாக போக வேண்டியவர் என்றும் வனிதா பேசியிருந்தார்.

என்னது இளையராஜா வீட்டுக்கு மருமகளாக வேண்டியவளா!! செய்யாறு பாலு சொன்ன உண்மை.. | Cheyyaru Balu Vanitha Ilayaraaja Copyright Issue

செய்யாறு பாலு

இதுகுறித்து செய்யாறு பாலு அளித்த பேட்டியில், இளையராஜாவிடம் அனுமதி வாங்கிதான் வனிதா அந்த பாடலை பயன்படுத்தி இருக்கிறார். அப்படி இருக்கும் போது, ஒரேவொரு பாட்டு தானே இளையராஜா விட்டுக்கொடுத்து இருக்கக்கூடாதா? ஏன் இளையராஜா ஒரு வியாபாரியாக நடந்து கொள்கிறார் என்று தெரியவில்லை.

அந்த மனவேதனையில் தான் வனிதா, அந்த வீட்டு மருமகளாகப் போக வேண்டியவள். கோவத்தில் இருக்கிறேன், தேவையில்லாததை வெளியில் சொல்லிவிட்டால், பிரச்சனையாகிவிடும் என்று சொல்லி கண்கலங்கி இருக்கிறார்.

வனிதா சொன்னதை கேட்ட பலரும் என்னது இளையராஜா வீட்டு மருமகளா? நல்ல வேளை தப்பிச்சாரு என்று இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருவதாக செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.