வலைப்பேச்சு அங்கிள்ஸ்.. ட்விட்டரில் பதிலடி கொடுத்த பாடகி சின்மயி
சின்மயி மீடூ புகார் சொன்ன பிறகு பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். அதற்க்கு பிறகு அவர் தமிழ் சினிமாவில் பாடுவதும் நின்றுபோனது. தன்னை போலவே பாலியல் ரீதியாக துன்புறுத்தல்கள் சந்திக்கும் பெண்களுக்கு ஆதரவாகவும் ட்விட்டரில் தொடர்ந்து பேசி வருகிறார் அவர்.
இதுபோல குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சொல்லும் சின்மயி போன்றவர்களது ட்விட்டர் கணக்கை முடக்க வேண்டும் என வலைப்பேச்சு சேனலில் வரும் மூன்று பேர் பேசி இருக்கின்றனர். அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் சின்மயி தற்போது பதிவிட்டு இருக்கிறார்.
வலைப்பேச்சு அங்கிள்ஸ் என் சமூக வலைதள கணக்கை முடக்கவேண்டும் என விரும்புகிறார்கள். அங்கிள்ஸ் முடக்கடப்படக்கூடாது என நான் விரும்புகிறேன், இன்னும் உளறி இன்னும் expose ஆகணும்."
"முடங்க முடியாது. போயி வீடியோ பண்ணுங்க போங்க சார்" என சின்மயி குறிப்பிட்டு உள்ளார்.
Valaipechu uncles want to shut down my social media account because I am ‘threatening’ (their molester friends?) it seems.
— Chinmayi Sripaada (@Chinmayi) January 12, 2022
I definitely wish these uncles DONT get mudakkified. Innum ulari innum expose aaganum:)
Mudanga mudiyadhu. Poyi video pannunga ponga Sir. ? pic.twitter.com/UpEoGK9UY5