கருப்பு படத்தில் டப்பிங் பேசியதை வெளியே சொல்லவே பயமாக இருந்தது - சின்மயி
Chinmayi
Karuppu
By Tony
சின்மயி தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த பாடகி. இவர் குரலுக்கு என பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் சின்மயி பாடகி மட்டுமின்றி நல்ல டப்பிங் ஆர்டிஸ்ட் கூட.
இவர் சமந்தா, திரிஷா என பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்துள்ளார். இவருக்கு டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவிக்கும் நீண்ட வருடமாக பிரச்சனை போக, சின்மயியை டப்பிங் யூனியனிலிருந்து நீக்கியதாக கூறப்பட்டது.

ஆனால், அதையும் மீறி லியோ படத்தின் சின்மயி டப்பிங் பேசினார். அதை தொடர்ந்து தற்போது கருப்பு படத்தில் திரிஷாவுக்கு சின்மயி டப்பிங் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர், நான் டப்பிங் பேசியதை வெளியே சொல்லவே பயந்தேன், நம்மால் ஆர் ஜே பாலாஜி-க்கு ஏதும் ஆகக்கூடாது என்பதால் வெளியே சொல்லவில்லை என சின்மயி கூறியுள்ளார்