பின்வாங்கிய அமீர், 12 லட்சம் பண பெட்டியுடன் கிளம்பிய மற்றொரு போட்டியாளர்

Vijay Tv Bigg Boss 5 Tamil Cibi Bigg Boss final
By Parthiban.A Jan 06, 2022 06:30 AM GMT
Report

அடுத்த வாரம் பிக் பாஸ் 5 பைனல் நடைபெற இருக்கிறது. அதில் மொத்தம் ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருக்கின்றனர். ஆனால் தற்போது மொத்தம் 7 பேர் இருக்கின்றனர்.

அவர்களில் இரண்டு பேரை எலிமினேட் செய்ய வேண்டி இருக்கிறது. இந்நிலையில் வீட்டிற்குள் கடந்த சில நாட்களாக பண பெட்டி அனுப்பப்பட்டு வருகிறது. ஒன்பது லட்சம் வரை அனுப்பப்பட்டும் அதை யாருமே எடுக்கவில்லை.

இன்றைய ப்ரொமோ வீடியோவில் அமீர் தான் 11 லட்சம் ருபாய் பெட்டியை எடுத்துக்கொண்டு போவதாக கூறுகிறார். ஆனால் இறுதியில் அது prank என சொல்லி சமாளிக்கிறார் அவர்.

இந்நிலையில் தற்போது 12 லட்சம் ருபாய் பெட்டி உடன் சிபி வீட்டை விட்டு வெளியே போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வந்த வரை லாபம் என அவர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.