அஜித்தை வைத்து படம் எடுத்த இயக்குனர் நிலைமை இப்படி ஆகிடுச்சே
நடிகர் அஜித்துக்கு தற்போது ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. ரசிகர் மன்றமே வேண்டாம் என அவற்றை கலைத்துவிட்டாலும் ரசிகர் கூட்டம் மட்டும் குறையாமல் அப்படியே இருக்கிறது. அதற்கு காரணம் அஜித் ஆரம்ப காலத்தில் நடித்த படங்களின் மூலம் ஈர்க்கப்பட்டு அவருக்கு ரசிகர்கள் ஆனவர்கள் தான் தற்போதும் அவருக்கு வெறித்தனமான ரசிகர்களாக இருக்கிறார்கள்.
அஜித் தற்போது உச்சத்தில் இருந்தாலும் அவரை ஆரம்பகாலத்தில் படம் இயக்கிய ஒரு இயக்குனர் தற்போது நல்ல நிலையில் இல்லை.
அஜித்தின் சிட்டிசன் படத்தை இயக்கிய சரவணன் சுப்பையா திரைப்படங்களிலும் அவ்வப்போது சின்ன சின்ன ரோல்களில் நடித்து இருக்கிறார். அவர் இயக்குனராக பெரிய அளவில் ஜெயிக்கவில்லை என்பதால் தற்போது நடிராகவே இருந்து வருகிறார்.
தற்போது அவர் கலர்ஸ் தமிழில் மந்திரப்புன்னகை என்ற தொடரில் அவர் டிடெக்டிவ் ஆக நடிக்க தொடங்கி இருக்கிறார். அஜித்தாய் வைத்து படம் இயக்கியவர் தற்போது சீரியலில் நடிக்கும் அளவுக்கு குறைந்துவிட்டதே என ரசிகர்கள் கமென்ட் செய்து வருகிறார்கள்.