வி. எஸ். பாபுவுக்கு பதில் சேகர் பாபுன்னு சொன்ன கூல் சுரேஷ்!! கொந்தளிக்கும் திமுக தொண்டர்கள்..
வி. எஸ். பாபு, 70 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று நவம்பர் 19 ஆம் தேதி மதியம் மரணமடைந்தார். அவரின் இறுதி ஊர்வலத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டு உடலை தோள்மீது சுமந்து சென்றார். தற்போது கூல் சுரேஷ் பேசிய விஷயம் சோசியல் மீடியா ரசிகர்களையும் திமுக தொண்டர்களையும் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

வி. எஸ். பாபு
2026 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற வி. எஸ். பாபு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று நவம்பர் 19 ஆம் தேதி மதியம் மரணமடைந்தார். அவரின் இறுதி ஊர்வலத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டு உடலை தோள்மீது சுமந்து சென்றார்.
இந்நிலையில் வி எஸ் பாபு மரணத்திற்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், கூல் சுரேஷ் பேசியிருப்பது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கூல் சுரேஷ்
கூல் சுரேஷ் பேசுகையில், வந்தார் வென்றார் சென்றார் என்று கூறி வி எஸ் பாபு என்று கூறுவதற்கு பதிலாக, சேகர் பாபு குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல் என்று கூறியிருக்கிறார். உடனே பக்கத்தில் இருந்தவர்கள் பதற, சேகர் பாபு இல்லை, வி எஸ் பாபு என்று பெயரை மாற்றி பேசினார். கூல் சுரேஷ் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் பரவி பலரும் அவரை கண்டித்து வருகிறார்கள்.
அடேய் சேகர் பாபு இல்லடா 😭 https://t.co/16btzxVBtE
— priya (@PriyankaSmile01) November 20, 2026