செருப்பால அடிப்பேன்..சாதி குறித்து பேசிய திவாகர் மீது கொந்தளித்த கூல் சுரேஷ்..
திவாகர்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 7வது சீசனின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் நடந்துள்ளது. அப்போது ஷூட்டிற்கு சென்ற பிக்பாஸ் பிரபலம் வாட்டர் மெலன் திவாகர், தன்னை மாகாபா ஆனந்த், புகழ், கானா வினோத் தாக்கியதாக கூறி போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார்.

அதன்பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அதுகுறித்து பேசிய விஷயம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாகாபா ஆனந்த், புகழ், கானா வினோத் உள்ளிட்டவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்தனர்.
அதில், குக் வித் கோமாளி ஷூட்டில் இருந்த பெண்ணிடம் வரம்புமீறி பேசினார். இதனால் பிரச்சனை ஏற்பட்டதால், விஜய் டிவி நிர்வாகம் தான் அவரை நிகழ்ச்சியில் இருந்து தூக்கிவிட்டது.

அதற்கு காரணம் நாங்கள் என்று நினைத்துக் கொண்டு இப்படிப்பட்ட வேலைகளை செய்துள்ளார். அவருக்கு எப்படியாவது பிரபலமாக வேண்டும், அதற்காகத்தான் இப்படிப்பட்ட வேலைகளை செய்கிறார் என்று கூறியுள்ளனர்.
கூல் சுரேஷ்
இது ஒரு பக்கம் இருக்க, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது சாதிகுறித்து பேசிய திவாகரை, சரமாரியாக திட்டி பேசியுள்ளார், கூல் சுரேஷ். ஏய் திவாகர், செருப்பால் அடிப்பேன் டா, தமிழ்நாட்டில் இருந்துக்கொண்டு சாதி பத்தியா பேசுற என்று கடுமையாக செருப்பை கழட்டி பேசியிருக்கிறார் கூல் சுரேஷ்..