தனுஷ் செய்த தவறால் வழக்கில் இருந்து தப்பித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! எல்லாமே அந்த ஒரு சீன் தான்
நடிகர் தனுஷ் நடிகர் மட்டுமில்லாது Wunderbar Films என்ற தயாரிப்பு நிறுவனத்தை தன் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் இணைந்து படங்களை தயாரித்து வந்தார்.
3, எதிர் நீச்சல், விஐபி, ஷமிதாப், காக்கி சட்டை, காக்கா முட்டிஅ, மாரி, நானும் ரவுடி தான், தங்க மகன், பா பாண்டி, விஐபி2, காலா, வடசென்னை, மாரி 2 போன்ற படங்களை தயாரித்தது. கடந்த 2014 ல் தனுஷ், அமலாபால் நடிப்பில் வெளியான விஐபி படம் வெளியானது. இப்படத்தில் தனுஷ் சிகரெட் பிடிக்கும் காட்சி பல இடங்களில் அமைந்திருந்தது.
இதனை எதிர்த்து தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டுக்கான மக்கள் அமைப்பு தரப்பில் தனுஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்கு போடப்பட்டது. 2014 ஆம் ஆண்டு சிகரெட் மற்றும் புகையிலையை விளம்பரப்படுத்துதல், முறையான சட்டவிதிகளை மீறி காட்சிகளும் திரையில் அமைக்கும் எச்சரிக்கை வசனங்களும் இடம் பெறாமல் இருந்ததற்காக இந்த வழக்கு போடப்பட்டது.
விசாரணை மேற்கொண்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் Wunderbar Films மற்றும் தனுஷ், ஐஸ்வர்யா மீது புகார் கொடுக்கப்பட்டு மனு தாக்கல் செய்திருந்தார்கள். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜராகும் படி உத்தரவிட்டு இருந்த நிலையில் ஐஸ்வர்யா தரப்பில், வழக்கை ரத்து செய்யக்கோரியும், விசாரணைக்கும், ஆஜராவதற்கும் தடைவிதித்து விலக்கு அளிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஐஸ்வர்யாவுக்கு வழக்கில் இருந்து ஆஜராவதில் விலக்கு அளித்து உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பாக விசாரிக்க சுகாதாரத்துறைக்கு நீதிபது உத்திரவிட்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வழக்கை தள்ளி வைத்தது.
இதற்கிடையில் நடிகர் தனுஷ் ஹாலிவுட் படத்தின் பிரமோஷனுக்காக அமெரிக்கா சென்றிருப்பதால் சென்னை திரும்பிய பிறகு வழக்கை ரத்து செய்ய வேண்டி கையெழுத்திட்டு மதுத்தாக்கல் செய்யவிருப்பதாகவும் அதையும்சேர்த்து விசாரிக்கவும் இருக்கிறாராம்.