சச்சின் சொல்லியும் கேட்காமல் குடிக்கு அடிமையாகிய கிரிக்கெட் வீரர்!! தற்போதைய நிலை..
வினோத் காம்ப்ளி
90-ஸ் காலக்கட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி புகழின் உச்சத்தில் இருந்த முன்னாள் வீரரின் வீடு, கார் என அனைத்தும் இன்று ஏலத்துக்கு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒன்பது ஆண்டுகள் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி சச்சின் டெண்டுல்கர், கஞ்சுரேகர் போன்ற மும்பை விரர்களுக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் தான் வினோத் காம்ப்ளி. 90ஸ் காலக்கட்டத்தில் கோடிஸ்வரராக இருந்த இவர் இன்று அனைத்தும் இழந்திருக்கிறார்.
1991ல் இந்திய அணியில் தேர்வு செய்த வினோத் காம்ப்ளி, சச்சினுடன் பள்ளியில் படித்தவர். இருவரும் ஒரே நேரத்தில் தான் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
காம்ப்ளி 1993ல் இந்திய டெஸ்ட் அணியில் விளையாடி முதல் டெஸ்ட் போட்டியிலேயே இங்கிலாந்துக்கு எதிராக 227 ரன்கள் குவித்தார். 17 டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக 54.20 ரன்கரேட்டை பெற்றும் 104 ஒரு நாள் போட்டியில் விளையாடி 2477 ரன்கள் குவித்துள்ளார்.
தற்போதைய நிலை
52 வயதை எட்டி இருக்கும் காம்ப்ளி, கிரிக்கெட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்டதால், கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகினார். ஹோட்டலில் வேலை செய்யும் பெண்ணை திருமணம் செய்து வாழ்க்கையை ஓட்டி வந்த காம்ப்ளிக்கு சச்சின் பல அறிவுரைகள் கூறியிருக்கிறார்.
இரண்டு கோடி மதிப்பில் வீடு கட்டியுள்ளார், அதற்கு வங்கியில் லோன் வாங்கியதால் கடனை திருப்பி செலுத்தாமல் சமீபத்தில் 8 கோடி மதிப்பிலான அவரது சொத்து ஏலத்திற்கு வந்துள்ளது. தற்போது உடல்நிலைக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.