வாய்ப்புக்காக நாடகம் போடுவான்னு சொல்லுவாங்க!! நடிகை தீபாவின் மறுப்பக்கம்,,

Gossip Today Tamil Actress Actress
By Edward Jul 02, 2025 10:35 AM GMT
Report

நடிகை தீபா

சின்னத்திரையில் மெட்டி ஒலி, மலர்கள், கோலங்கள், கார்த்திகை பெண்கள், வாணி ராணி, லட்சுமி ஸ்டோர், நாச்சியாபுரம், செந்தூர பூவே, அன்புடன் குஷி உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை தீபா.

வாய்ப்புக்காக நாடகம் போடுவான்னு சொல்லுவாங்க!! நடிகை தீபாவின் மறுப்பக்கம்,, | Cwc Actress Deepa Another Face And Son Stuggled

தன்னுடைய சிரிப்பு முகத்துடன் அனைவரது கவனத்தை ஈர்த்த தீபா, பல திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வந்தார். குக் வித் கோமாளி 2, மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை 3, டாப் குக்கு டூப் குக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிஸியான நடிகையாக உலா வருகிறார்.

மகன் மற்றும் குடும்ப சூழல்

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் தன்னுடைய மகன் மற்றும் குடும்ப சூழல் பற்றி பகிர்ந்துள்ளார். அதில், நாடகம் நடிக்கும் போது அழுகை வராது.

“நடிக்கிற மாதிரி நடிக்காத" என்று சொல்லும் போது செத்தே போய்டுவேன், சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகைகளை காயப்படுத்தும் வார்த்தை இதுதான்.

எல்லோருக்கும் காலில் முள் குத்தினாள் வலிக்கும், அதுபோல தான் நடிகைகளுக்கும். ஏன் நடிகைகள் அழுதா மட்டும் நாடகம்னு என்றும் வாய்ப்புக்காக நாடகம் போடுறான்னு சொல்லுவாங்க. இத்தனை வருடத்தின் நான் பல விஷயத்தை இழந்து, கடந்து வந்திருக்கிறே.

நான் அழுவதால் எனக்கு வாய்ப்பு வருதுன்னு சொல்லுவாங்க, திறமை இருந்தால் மட்டுமே அந்த இடத்தில் நிற்கமுடியும். நான் யாருக்கு உதவி செய்கிறேன் என்று வெளியில் சொல்லமாட்டேன், உதவு பெறுபவர்களுக்கு அது அவமானம். நான் சிரிப்பது எல்லாம் பொய் என்று சொல்வாங்க, என் ஸ்கூல்ல என்ன பண்ணனேன்னு கேட்டு பாருங்க. ஊனமுற்றவர்களுக்கு நான் அப்போது உதவி அவ்வளவு பண்ணி இருக்கேன்.