குக் வித் கோமாளி சுனிதா உடன் திருமணம்! வெளிப்படையாக ஆசையை சொன்ன பிரபல நடிகர்
விஜய் டிவி என்றாலே அந்த சேனலில் இருக்கும் காமெடியன்கள் மற்றும் காமெடி ஷோக்கள் தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு பலரும் பாப்புலர் ஆகி இருக்கின்றனர். அந்த சேனலில் இருந்து பலரும் வெள்ளித்திரைக்கும் சென்றிருக்கிறார்கள்.
மேலும் குக் வித் கோமாளி ஷோவுக்கு ரசிகர்களுக்கு பஞ்சம் இருக்காது. தற்போது ஒளிபரப்பாகி வரும் 3ம் சீசனில் பங்கேற்றிருக்கும் பலரும் புகழின் உச்சிக்கே சென்று இருக்கிறார்கள்.
சார்பட்டா பரம்பரை நடிகர் சந்தோஷ் பிரதாப் போட்டியாளராக கலந்துகொண்ட நிலையில் சமீபத்தில் அதில் இருந்து வெளியேறினார். அதில் அவர் சுனிதா உடன் ரொமான்ஸ் செய்வது போல தான் காட்டப்பட்டது.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ரோஷினி அல்லது சுனிதா - இருவரில் ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள் என கேட்டிருக்கின்றனர். அதற்க்கு பதில் கூறிய அவர் சுனிதாவை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து இருக்கிறார்.
சுனிதா எனக்கு ஒரு நல்ல தோழி, அதனால் அவரை திருமணம் செய்ய ஒப்புக் கொள்வேன் எனவும் கூறி உள்ளார் அவர்.

