நல்லவர்களாக நடிப்பார்கள், பின் துரோகிகளாக மாறி விடுவார்கள்.. யாரை கூறுகிறார் டி. இமான்
தமிழ் சினிமாவில் உள்ள தரமான இசையமைப்பாளர்களில் ஒருவர் டி. இமான். இவர் தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
தொடர்ந்து பல திரைப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். தற்போது மாம்போ, வள்ளிமயில், மலை, பப்ளிக் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்த நிலையில், இசையமைப்பாளர் டி. இமான் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் என்ன கூறியுள்ளார் என்று இதோ பாருங்க..
அவர் கூறியதாவது, "என்னிடம் டைம் மிஷின் இருந்திருந்தால், 10 ஆண்டுகளுக்கு முன் இமானை எச்சரித்து இருந்தே. பலர் வெளியில் நல்லவர்களாக நடிப்பார்கள், ஆனால் நேரம் வந்ததும் துரோகம் செய்து விலகி செல்லும் முதலைகளாக மாறிவிடுவார்கள்" என கூறியுள்ளார். இவர் பேசிய இணையத்தில் வைரலாகவும், டி. இமான் யார் இப்படி குறிப்பிட்டு பேசியுள்ளார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.