நிறம் மற்றும் அழகு குறித்து கேலி! யாரும் திருமணம் செய்யமாட்டார்கள் என கிண்டல்.. மனம் திறந்து பேசிய மீனாட்சி சவுத்ரி
வளர்ந்து வரும் தென்னிந்திய நடிகைகளில் ஒருவர் மீனாட்சி சவுத்ரி. ஹிட், குண்டூர் காரம், GOAT, லக்கி பாஸ்கர், சங்கராந்திகி வஸ்துனம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ரசிகர்களின் மனம் கவர்ந்த இளம் நாயகியாக வலம் வரும் மீனாட்சி சவுத்ரி தான் கடந்து வந்த பாதை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அது தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
அவர் கூறியதாவது, "அரியானாவில் உள்ள கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான் எனது நிறம் மற்றும் அழகு குறித்து கடும் கேலிகளை சந்தித்தேன். என்னை யாரும் திருமணம் செய்யமாட்டார்கள் என கிண்டல் செய்தவர்களுக்கு மத்தியில், சாதிக்க வேண்டும் என வைராக்கியம் எனக்குள் பிறந்தது.

மருத்துவராக விரும்பினேன், என் அழகை உலகுக்கு கட்ட குடும்பத்தின் ஆதரவுடன் மின் இந்தியா பட்டம் வென்றேன். முதலில் பிகினி மற்றும் ஆடை விஷயத்தில் என்னை எதிர்த்து அதே கிராம மக்கள், இப்போது எனது வெற்றியால் மனமாற்றம் அடைந்து, என்னை மிகவும் மரியாதையுடன் கொண்டாடி வரவேற்கிறார்கள்" என கூறியுள்ளார்.