நடிகர் பாபி தியோல் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா!! அடேங்கப்பா
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பாபி தியோல். மறைந்த நடிகர் தர்மேந்திராவின் மகனான இவர், தனது சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார்.
ஆனால், அனிமல் படம்தான் இவருக்கு பான் இந்திய அளவில் நட்சத்திர அந்தஸ்தை பெற்று தந்தது. இப்படத்திற்கு பின் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் வில்லனாக நடித்து வருகிறார்.

அடுத்ததாக இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ஜனநாயகன். முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து இப்படத்தில் பாபி தியோல் நடித்திருக்கிறார்.
இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் பாபி தியோலுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், பாபி தியோல் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 70 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ஜனநாயகன் படத்தில் நடிப்பதற்காக இவர் ரூ. 3 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.