நடிகை ருக்மிணி வசந்த் காதலிக்கும் நபர் இவரா? புகைப்படம் வைரல்!! உண்மை என்ன?
Indian Actress
Actress
Rukmini Vasanth
By Kathick
இன்றைய சூழலில் இந்திய சினிமாவில் பிரபலமான டாப் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார் ருக்மிணி வசந்த். அதுவும் காந்தாரா சாப்டர் 1 படத்தின் வெற்றிக்கு பின் இந்திய அளவில் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

அடுத்ததாக ஜூனியர் என்.டி.ஆர் உடன் டிராகன், யாஷ் உடன் டாக்சிக் என பிரம்மாண்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
இந்த நிலையில், நடிகை ருக்மிணி வசந்த் காதலிக்கிறார், இவர்தான் அவருடைய காதலர் என கூறி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், அது ருக்மிணியின் காதலர் அல்ல, நண்பர் மட்டுமே. ஆம், நடிகை ருக்மிணி வசந்தின் காதலர் அவர் கிடையாது. இருவரும் நல்ல நண்பர்கள்.

இதனை சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை ருக்மிணியே கூறியிருக்கிறார். ஆனாலும், இந்த புகைப்படம் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.