விவாகரத்தாகி 6 வருடங்களுக்கு பின் இரண்டாம் திருமணம்!! தொகுப்பாளினி டிடி திடீர் முடிவு..
சின்னத்திரை தொலைக்காட்சி சேனலில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலான தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

விவாகரத்து
சின்னத்திரை சீரியல், ரியாலிட்டி ஷோக்களில் நடிக்க ஆரம்பித்து பின் விஜய் தொலைக்காட்சியில் காஃபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறார். இந்தியாவை சேர்ந்த பல நட்சத்திரங்களை தன் பாணியில் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த 2014ல் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட டிடி, கருத்து வேறுபாடு காரணமாக அவரை 2017ல் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதன்பின் தனிமையில் இருந்து பேராசிரியர் பணியையும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார்.

இரண்டாம் திருமணம்
இந்நிலையில் டிடி-க்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்திருக்கிறார்களாம். நடன இயக்குனர் சதீஷுடன் நெருக்கமாக இருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் டிடி கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் கசிந்துள்ளது.
இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஏற்கனவே மீனா இரண்டாம் திருமணம், சினேகா - பிரசன்னா விவாகரத்து என பல வதந்தி செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.