ரஜினியிடம் தப்பித்த நடிகை? அஜித் படத்தால் தேவயானி வாழ்க்கை மாறியதாம்?
தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை தேவயானி. முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டு நடித்திருந்த தேவயானி தற்போது சீரியல்களிலும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ரஜினிகாந்துடன் நடிக்காமல் இருந்ததை நினைத்து பீல் பண்ணவில்லை. அவருடன் நடிக்க எனக்கு சரியான கதையும் வரவில்லை அமையவில்லை என்று தான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
விஜய்யின் நினைத்தேன் வந்தால் படமே அஜித்தின் காதல் கோட்டை கொடுத்தது. அஜித்துடன் காதல் கோட்டையில் கமளி கதாபாத்திரத்தில் நடித்தது தான் என் சினிமா வாழ்க்கையை கொடுத்தது. அப்படமே இல்லை என்றால் எனக்கு அடுத்தடுத்த படங்கள் அந்த அளவிற்கு சக்சஸாக இருந்திருக்காது என்று கூறியுள்ளார்.
மேலும் என்னுடைய இரு மகள்களும் இசையில் ஆர்வம் கொண்டவர்கள். நடிப்பில் ஆர்வம் கிடையாது. எது அவர்களுக்கு வெற்றியாக அமையுமோ அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்று வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.