உயிரோடு இருக்கும் அப்பாவை கொன்ற பிக்பாஸ் தனலட்சுமி... சுயரூபத்தை போட்டுடைத்த நண்பர்கள்..

Kamal Haasan Bigg Boss
By Edward Nov 09, 2022 10:24 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6.

பிக்பாஸ் வீட்டில் 21 போட்டியாளர்கள் அனுப்பட்ட நிலையில் ஜிபி முத்து தானாகவே வெளியேறியதை தொடர்ந்து சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, ஷெரினா உள்ளிட்டவர்கள் இதுவரை சென்ற நிலையில் அடுத்த வாரம் யார் போவார்கள் என்று யூகித்தும் வருகிறார்கள்.

தனலட்சுமி

நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்த பல சர்ச்சையிலும் வெறுப்பையும் சம்பாதித்து வருகிறவர் தனலட்சுமி. ஆரம்பத்தில் தன் அம்மா சிங்கிள் என்றும் கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறோம் என்று கூறியிருந்தார். டிக்டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான தனலட்சுமியின் இரு தோழிகள் ஒரு ஆண் நண்பர் பேட்டி கொடுத்து பல உண்மைகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

பச்ச துரோகி

டிக்டாக்கில் விருது நிகழ்ச்சி ஒன்றினை தனலட்சுமியே செலவு செய்து நடத்தினார் என்றும் இரு படங்களில் நடித்தும் இருக்கிறார் என்றும் கூறியுள்ளனர். நண்பர்கள் என்றும் பாராமல் தங்களை ஏமாற்றி துரோகம் செய்ததாகவும் தனலட்சுமி மீது புகார் தெரிவித்துள்ளனர். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறும் சில விசயத்தாலேயே நாங்கள் பார்ப்பதையே நிறுத்திவிட்டோம் என்று காட்டமாக பேசியுள்ளார்கள். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.