ஒரு கோடி அப்பு!! ஐடி விங்ஸுக்காக தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு..
தனுஷ்
அரசியல் கட்சிகள் சமீபகாலமாக சோசியல் மீடியாக்களில் வலுவாக செயல்பட டிஜிட்டல் அணிகளை உருவாக்கி வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் தோல்வியை அடுத்து திமுக கட்சியினர் Gen Z ஐடி விங் ஆரம்பித்து மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என தனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ள தனுஷ், சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் அவர் அரசியலுக்கு வரப்போகிறாரா என்ற விவாதம் எழுதது.

சமீபத்தில் கூட அரசியல் நுழைவு குறித்து தனுஷ், அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. அதேசமயம் அவரது ரசிகர் மன்றங்களின் செயல்பாடுகள் அரசியல் விவாதங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. சமீபத்தில் கோவை மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் நலச்சங்கங்களை உருவாக்கி, புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளிலும் தொகுதி வாரியாக ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையை எடுத்தார்.
அதற்கு முன்னதாக ரசிகர்கள் நடத்தி வரும் நலப்பணிகளை பாராட்டிய தனுஷ், சமூககத்திற்கு தேவையான நலப்பணிகளை அதிகளவில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஐடி விங்
இந்நிலையில், சுமார் ரூ. 1 கோடி மதிப்பில் சமூக வலைத்தள ஐடி விங் உருவாக்கப்படுவதாக வெளியாகியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இக்குழு அரசியல் கட்சிகளின் டிஜிட்டல் அணிகளை போன்ற கட்டமைப்புடன் செயல்படும் வகையில் உருவாக்கப்படுவதாகவும், சமூக வலைத்தள இருப்பை ஒருங்கினைத்து வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நகர்வை அரசியல் வருகைக்கு அடுத்தபடியானதோ என்று விவாதங்கள் எழுந்து வருகிறது.