தனுஷ் - ஐஸ்வர்யா உண்மையில் சேருகிறார்கள்.. ரஜினி வீட்டில் நடந்தது இதுதான்.

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth
By Edward Oct 16, 2022 08:00 AM GMT
Report

நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தனுஷ் வெற்றியில் முக்கியப்பங்கினை வகித்து வந்தார் ஐஸ்வர்யா. அவரை வைத்து 3 என்ற படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு ஜோடியாகவும் நெருக்கமாகவும் நடிக்க வைத்தார்.

அப்படி இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்களை பெற்றெடுத்தனர். இரு மகன்களும் தற்போது வளர்ந்த நிலையில் 18 வருட திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து விடுகிறோம் என்று அறிக்கை மூலம் தெரிவித்தனர்.

இந்த செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் வீட்டில் இரு குடும்பத்தினரும் சமூகமாக பேசி விவாகரத்தை ஒத்து வைப்பதாகவும் செய்யவேண்டாம் என்ற முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி வைரலானது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தனுஷின் 150 கோடி மதிப்பில் போயஸ் கார்டனில் உருவாகியுள்ள புது வீட்டிற்குள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ரஜினிகாந்த வீட்டில் நடந்த மீட்டிங்கில் ரஜினிகாந்த் இருவரை சேர்ந்து வாழ சொல்லி கூறவில்லையாம். அப்போது எந்த முடிவையும் எடுக்கவில்லையாம். என்ன பிரச்சனை இருந்தாலும் விவாகரத்து ஒரு தீர்வாகாது என்று சூப்பர் ஸ்டார், தனுஷ், ஐஸ்வர்யாவிடம் கூறி வருகிறாராம்.

அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினாராம். மேலும் இதுகுறித்து அவர்களிடம் பேசவும் இருக்கிறாராம். யாத்ரா, லிங்காவிற்காக நல்ல முடிவை எடுக்கவும் குடும்பத்தினர் கூறி வருகிறாராம்.

இப்படி ஒரு பேச்சு நடக்கையில் தனுஷ் 150 கோடி செலவில் உருவாக்கியுள்ள போயர் கார்டன் பிரம்மாண்ட வீட்டில் யாத்ரா, லிங்காவுடன் சேர்த்து ஐஸ்வர்யாவையும் அழைத்து கூட்டிச்செல்ல வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் அனைவரிடமும் இருந்து வருகிறதாம்.