9 மாத பிரிவுக்கு பின் ரஜினி மகள் ஐஸ்வர்யா எடுத்த முடிவு.. தனுஷுடன் ரஜினி அதிரடி மீட்டிங்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் இருவரும் காதல் தம்பதியினராக ஜொலித்து வந்தும் கணவரை வைத்து 3 படத்தினை இயக்கியும் வெற்றி கண்டார்.
18 வருட வாழ்க்கை
இருவரும் திருமணமாகி யாத்ரா, லிங்கா என இரு மகன்களை பெற்று வாழ்ந்து வந்தனர். இப்படி சென்று கொண்டிருக்கும் போது ஜனவரி மாதம் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக அறிக்கை மூலம் தெரிவித்தனர்.
இந்த செய்தி திரையுலகினரையில் சூப்பர் ஸ்டார் குடும்பத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனை தொடர்ந்து இருவரும் தங்கள் பணிகளில் கவனம் செலுத்தியும் இரு மகன்களுடன் கிடைக்கும் நேரத்தில் செலவிட்டும் வந்தனர்.
18 வருட திருமண வாழ்க்கையில் இருவரின் பெயரில் சில தவறுகளும் இருப்பதாகவும் அதன் காரணமாகத்தான் பிரிந்துவிட்டார்கள் என்றும் கூறப்பட்டது. இதேபோல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நெருங்கிய நண்பருடன் நெருக்கமாக இருப்பதால் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வைரலானது.
மகன்களால் ஏற்பட்ட மாற்றம்
இப்படியொரு செய்தி உலாவும் நிலையில், இருவரும் சந்தித்து பேசி ஒன்றாக சேர்ந்துவிடலாம் என்ற முடிவை எடுத்துள்ளார்களாம். இதுகுறித்து ரஜினிகாந்த் வீட்டில், இரு குடும்பத்தினரும் சந்தித்து மீட்டிங் வைத்திருக்கிறார்களாம். இதனால், இரு மகன்களின் எதிர்காலத்தை நினைவில் கொண்டு விவாகரத்து பெறாமல் சேர்ந்து வாழலாம் என்றும் இந்த தகவலை அவர்களின் 19வது திருமண நாளான நவம்பர் 18 ஆம் தேதி குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே விவாகரத்து கோரி உடனடியாக மனுத்தாக்கல் செய்ய வேண்டாம் என்றும் முடிவெடுத்துள்ளார்களாம். இந்த தகவல் அதிகாரப்பூர்வமா இருவரும் நவம்பர் 18ல் வெளியிட்டால் தான் உண்மை என்ன என்று தெரியவரும்.