சூப்பர் ஸ்டாரை அப்படியே உரித்து வைத்திருக்கும் தனுஷ் மகன்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்களை பெற்று இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறி அதிர்ச்சி கொடுத்தனர். இந்த செய்தியால் அனைவரும் குழப்பத்தில் இருக்க இருவரையும் சேர்த்து வைக்க ரஜினிகாந்த் முயற்சித்துள்ளார்.
ஆனால் இருவரும் அவர்களின் வேலையில் பிஸியாக இருந்தும் இரு மகன்களுடன் நேரத்தை செலவிட்டும் வருகிறார்கள். தற்போது தனுஷ் - ஐஸ்வர்யாவின் மகன் யாத்ரா, தாத்தா ரஜினிகாந்த் லுக்கில் இருப்பதை அனைவரும் வியர்ந்து பார்த்து வருகிறார்கள்.
அச்சு அசல் சூப்பர் ஸ்டாரை பார்ப்பது போல் இருக்கும் யாத்ராவின் புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.