மனைவியை நினைத்து உருகும் தனுஷ்? இப்படியொரு வரி ஏன் எழுதுனாரு?

Dhanush Rajinikanth Priya Bhavani Shankar Aishwarya Rajinikanth Thiruchitrambalam
By Edward Jul 18, 2022 09:05 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். கடந்த ஜனவரி மாதம் தன்னுடைய 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிவதாக முடிவெடுத்து அறிக்கை வெளியிட்டார். இதற்கு ஐஸ்வர்யாவும் ஒரு அறிக்கை மூலம் பிரிந்துள்ளதாக அறிவித்தார்.

இதனை அடுத்து இருவரும் அமைதியாக யாரையும் குறைக்கூறாமல் பிரிந்து தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என பட்டையை கிளப்பி நடித்தும் ஐஸ்வர்யா தன் பங்கிற்கு இயக்கம், உடற்பயிற்சி, சைக்கிளிங் என்று பிஸியாக இருந்து வருகிறார்.

தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பாடல்கள் வெளியிட்டு வருகிறார். நித்யாமேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட 3 நடிகைகள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

அப்படி அனிருத் இசையில் தனுஷ் பாடல்வரியில் பாடிய மேகம் கருக்காத என்ற பாடல் வெளியாகியது. அதில் இருக்கும் வரிகள் மனைவி ஐஸ்வர்யாவை நினைத்து தான் பாடி இருக்கிறாரோ என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

பழைய ரணங்கள் மறக்குதே என்ற வரியை அப்படியே ஐஸ்வர்யாவுக்கு பொருத்தமாக இருக்கிறது என்று கூறி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.