மிருணாள் தாகூருடன் இரண்டாம் திருமணம் செய்யவுள்ளாரா தனுஷ்!! தேதியும் குறிச்சாச்சாம்?
தனுஷ்
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து தற்போது பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று நடித்து மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வருபவர் தான் நடிகர் தனுஷ்.
அவர் நடிப்பில் கடைசியாக தேரே இஷ்க் மே படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றும் வசூல் ரீதியாக நல்ல வசூலை ஈட்டியும் இருந்தது. இதனையடுத்து இன்று தனுஷ் கர என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே திருமணமாகி இரு மகன்கள் இருக்கும் நிலையில் விவாகரத்து செய்து பிரிந்த தனுஷ் பற்றிய சில கிசுகிசுக்கள் இணையத்தில் பரவி வருகிறது.
மிருணாள் தாகூருடன்
அதில், 42 வயதான தனுஷ், 33 வயதான நடிகை மிருணாள் தாகூரை பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இத்திருமணம் மிகவும் தனிப்பட்ட முறையில் நடைபெறும் என்றும் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இருவரும் சன் ஆஃப் சர்தார் 2 படத்தின் சிறப்பு காட்சியில் ஒன்றாக கைக்கோர்த்து நடந்த வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும் தேரே இஷ்க் மே படத்தின் வெற்றி பார்ட்டியிலும் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டதை வைத்தும் இப்படி பேசி வருகிறார்.
இதற்குமுன் நடிகை முருணாள் தாகூர், தனுஷ் என் நல்ல நண்பர் மட்டுமே, இது எல்லாம் வேடிக்கையான வதந்தி என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.