எப்பா தனுஷ் படமே வேண்டாம்பா, தெறித்து ஓடிய பெண் ஒளிப்பதிவாளர்

dhanush
By Tony Dec 26, 2021 08:30 AM GMT
Report

தனுஷ் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு பல மொழிகளில் நடித்து அசத்தி வருகின்றார்.

தற்போது கூட தெலுங்கு மொழியில் வாத்தி என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் தனுஷ் தன் அண்ணன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

இந்த படம் எப்போது தொடங்கும், எப்போது முடியும் என்று யாருக்குமே தெரியவில்லை.

ஏனெனில் படம் ஆரம்பித்தத்திலிருந்து ஏதாவது ஒரு பிரச்சனை தான்.

முதலில் படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா வெளியேறினார்.

பிறகு ஒரு பெண் ஒளிப்பதிவாளர் கமிட் ஆனார், ஆனால், என்ன நடந்தது என்று தெரியவில்லை அவரும் இந்த படத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

ஒரு சிலர் தனுஷுடன் அவருக்கு ஏற்பட்ட மோதலே இதற்கு காரணம் என்று கூறி வருகின்றனர்.