அக்கா மகனுக்காக அஜித் ரீல் மகளை தூண்டில் போட்டு தூக்கிய தனுஷ்...
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கிற்கு பின் தானே நடித்து இயக்கும் டி50 படத்தினை இயக்கி படப்பிடிப்பையும் முடித்துள்ளார். இதனை அடுத்து அவரது இயக்கத்தில் 3 வது படத்தின் பூஜையும் சமீபத்தில் போடப்பட்டது.
இயக்கத்தில் டி3 படத்தில் ஜிவி பிரகாஷ் இசையில், நடிகர் சரத்குமார் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் அவருடன் எடுத்த புகைப்படமும் இணையத்தில் வெளியானது.
இந்நிலையில் தனுஷ் இயக்கும் இப்படத்தில் அவரது அக்கா மகனை ஹீரோவாக நடிக்க வைக்கப்போகிறார் என்றும் சென்னையில் படப்பிடிப்பை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இப்படத்தின் ஹீரோயினாக தமிழில் அறிமுகமாகவுள்ளார் நடிகை அனிகா சுரேந்திரன். என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்தின் ரீல் மகளாக நடித்த அனிகா 18 வயதை கடந்த பின் தமிழில் ஹீரோயினாக, அதுவும் தனுஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.