என் மகனுக்கு அப்படி நடக்கக் கூடாது!! நடிகர் தனுஷ் ஓப்பன் டாக்...
தனுஷ்
தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என்று நடிக்க ஆரம்பித்து கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை தனுஷ். தற்போது நடிப்பை தாண்டி இயக்கத்திலும் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை போன்ற படங்களை இயக்கி வரும் தனுஷ், கடந்த ஆண்டு இறுதியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடனான திருமண வாழ்க்கை சட்டரீதியாக முடிவடைந்தது.
இரு மகன்கள் யாத்ரா, லிங்கா இருக்கும் நிலையில் இருவரும் விவாகரத்து செய்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் நடிகர் தனுஷ், தன் மகன் யாத்ரா பற்றி பேசிய ஒரு வீடியோ தற்போது ட்ரெண்ட்டாகியுள்ளது.
என் மகனுக்கு அப்படி நடக்கக் கூடாது
அதில் நான் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரின் மகனாக இருந்தாலும் என்மீது கேமரா ஃப்ளாஷ் அடிப்பதற்கு 16 வருடங்களாகிவிட்டன. அந்த ஒரு கேமரா 10 கேமராக்கள் ஆவதற்கு கிட்டத்தட்ட 4 சூப்பர் ஹிட் படங்களை நான் கொடுக்க வேண்டியிருந்தது.
அதேபோல் கேமரா ஃப்ளாஷ் அடிப்பதற்கு அவ்வளவு கஷ்டங்களை பலர் படுகிறார்கள். அதேசமயம் என் மகன் என்கிற ஒரே காரணத்திற்காக மட்டும் அந்த ஃப்ளாஷ் அவர் மீது அடிக்கக்கூடாது, அவராக உழைத்து முன்னேற வேண்டும் என்று தனுஷ் பேசியுள்ளார்.