தனுஷுக்கும் செல்வராகவனுக்கும் இந்த ஒரு விஷயத்தால் சண்டையா

Dhanush
By Parthiban.A Jul 19, 2022 12:21 PM GMT
Report

நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் பல வருடங்களுக்கு பிறகு தற்போது ஒரு படத்திற்கு கூட்டணி சேர்ந்து இருக்கின்றனர். நானே வருவேன் என்ற படத்தில் அவர்கள் இணைந்து இருக்கும் நிலையில் அந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

தனுஷ் கதை எழுதி இருக்கும் நிலையில், அதை செல்வராகவன் இயக்கி இருக்கிறார். படம் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போது இருந்தே தனுஷ் மற்றும் செல்வராகவன் இடையே பிரச்சனை தொடங்கிவிட்டதாம்.

தனுஷுக்கும் செல்வராகவனுக்கும் இந்த ஒரு விஷயத்தால் சண்டையா | Dhanush Upset On Selvaraghavan After Naane Varuven

தான் நினைத்தது போல செல்வராகவன் படம் எடுக்கவில்லை என தனுஷ் பல ஷாட்களில் கூறினாராம். மேலும் எடிட்டிங் நடக்கும் நேரத்திலும் அவர்கள் நடுவில் பல பிரச்சனைகள் வந்திருக்கிறது.

செல்வராகவன் மீது தனுஷ் பெரிய அதிருப்தியில் தான் இருந்து வருகிறாராம். தான் எழுதிய கதையை இப்படி செய்துவிட்டார் என செல்வா மீது தனுஷ் செம கடுப்பிலும் இருக்கிறாராம்