பணத்துக்காக எல்லைமீற மாட்டேன்..முருகப்பெருமான் சாட்சி!! நடிகை தர்ஷா..

Gossip Today Instagram Dharsha Gupta
By Jai Aug 10, 2026 06:00 AM GMT
Report

தர்ஷா குப்தா

தர்ஷா குப்தா சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். இதை விட குக் வித் கோமாளி தான் இவருக்கு பெரிய மேடையை போட்டு கொடுத்தது. சமீப காலமாக இன்ஸ்டாவில் Subscribers ஆப்ஷன் வைத்தே இவர் பல லட்சம் சம்பாதித்துவிட்டார் என்று கிளாமரில் எல்லைமீறுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

பணத்துக்காக எல்லைமீற மாட்டேன்..முருகப்பெருமான் சாட்சி!! நடிகை தர்ஷா.. | Dharsha Gupta Clarifies Allegations With Emotional]

எல்லைமீற மாட்டேன்

அதில், இத்தனை ஆண்டுகளாக என்னை நேசித்து வந்தவர்களிடம், நான் எப்படிப்பட்டவள் என்பதை விளக்க வேண்டிய நிலை வரும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.

Renown செயலி என்பது, என் ரசிகர்கள், எனக்கு குடும்பம் போன்றவர்கள், என்னிடம் தங்களுடைய பிறந்தநாள் அல்லது திருமணநாள் வாழ்த்துகளைப் பெறவோ, அல்லது என்னுடன் தனிப்பட்ட முறையில் பேசவோ முடியும் என்றுதான் நான் நினைத்தேன். அதுதான் நான் அதில் இணைய சம்மதித்த ஒரே காரணம்.

நான் சொல்வது உண்மை என்பதற்கு முருகப்பெருமான் சாட்சியாக இருக்கிறார். அந்த தளத்தில் வேறு என்ன நடக்கிறது என்பது எனக்கு ஒருபோதும் தெரியாது.

பணத்துக்காக எல்லைமீற மாட்டேன்..முருகப்பெருமான் சாட்சி!! நடிகை தர்ஷா.. | Dharsha Gupta Clarifies Allegations With Emotional]

என் அம்மா எனக்கு கற்றுக்கொடுத்த மதிப்புகளுடன்தான் நான் வாழ்ந்து வருகிறேன். நான் கவர்ச்சியான புகைப்படங்களைப் பகிரலாம், ஆனால் எனக்கென்று சில எல்லைகள் உள்ளன. எந்த அளவிலான பணமோ அல்லது புகழோ வந்தாலும், அந்த எல்லைகளை நான் ஒருபோதும் கடக்க மாட்டேன்.

என்னைப் பற்றிய விமர்சனங்கள் என்னை அதிகமாக காயப்படுத்தவில்லை. ஆனால், இத்தனை ஆண்டுகளாக என்னை நேசித்து நம்பியவர்கள், நான் ஒருபோதும் இல்லாத ஒரு நபராக என்னை நினைத்திருக்கலாம் என்பதுதான் என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது.

இத்தனை ஆண்டுகளாக நீங்கள் அறிந்த அதே நபராகவே என்னை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்; நான் ஒருபோதும் செய்யாத ஒரு விஷயத்திற்காக என்னை நினைக்க வேண்டாம் என்று தர்ஷா குப்தா மனவேதனையுடன் இந்த பதிவினை பகிர்ந்துள்ளார்.

Gallery