ஏன், என்ன தப்பா ப்ரொஜெக்ட் பண்றீங்க - பிரபல நடிகை கண்ணீர்மல்க பேட்டி
தர்ஷா குப்தா
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் தர்ஷா குப்தா. இவர் விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பெங்கேற்று பிரபலமானார்.
சின்னத்திரையில் நடித்த வந்த தர்ஷா, ருத்ரா தாண்டவம் படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் தடம் பதித்தார்.மேலும் இவர், நேற்று வெளியான "ஓ மை கோஸ்ட்" என்ற படத்திலும் நடித்துள்ளார். இதில் சன்னி லியோன், சதிஷ், ஜிபி முத்து போன்ற பலரும் நடித்துள்ளனர்.

என்ன பாவம் செய்தேன்
சமீபத்தில் இப்படத்தின் பிரஸ் ஷோவிற்கு வருகை தந்த தர்ஷவின் உடையை அவரின் அசிஸ்டண்ட் மிதித்து விட்டார். அதற்கு அந்த நபரை பார்த்து தர்ஷா கோவமாக ரியாக்ஷன் கொடுத்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் இதை குறித்து பத்திரிகையாளர்கள் தர்ஷாவிடம் கேள்வி எழுப்பினார்கள். பதில் அளித்த அவர்,"எதற்கு என்னை தவறாக ப்ரொஜெக்ட் செய்கிறீர்கள். நான் உங்களுக்கு என்ன பாவம் செய்தேன். என்னுடைய ஆடையை யார் மிதித்தார் என்று தான் பாத்தேன். அதற்கு நான் கோவப்படவில்லை" என்று கண்ணீர்மல்க பேட்டி அளித்தார்.
