அடிபோலி LKGக்கு மட்டும் 14 லட்சம் பீஸ்...திருபாய் அம்பானி பள்ளியின் ஒரு மாத கட்டணமே இத்தனை லட்சமா?
திருபாய் அம்பானி இன்டர்நேஷ்னல் ஸ்கூல்
உலகமே மிரண்டு போகும் அளவிற்கு வியக்கும் வகையில் பிரம்மாண்ட குடும்பமாக திகழ்ந்து வருபவர்கள் தான் அம்பானி குடும்பத்தினர். முகேஷ் அம்பானியின் அத்தனை லட்சக் கோடியில் சொத்தில் முக்கிய பங்கினை வகித்து வருகிறது திருபாய் அம்பானி இன்டர்நேஷ்னல் ஸ்கூல்.
இப்பள்ளியில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் சர்வதேச பள்ளியின் வருடாந்திர நாள் விழா சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு பாலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில், மும்பையில் இருக்கும் இப்பள்ளியில், ஒரு மாதத்திற்காக பள்ளிக் கட்டணம் எவ்வளவு வசூலிக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு மாத கட்டணம்
மழலையர் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இருக்கும் திருபாய் அம்பானி இன்டர்நேஷ்னல் ஸ்கூலில் 2023 - 2024 கல்வியாண்டிற்காக கல்விக்கட்டணம் மழலையர் பள்ளிக்கு ரூ. 14 லட்சம் முதல் 12 ஆம் வகுப்புக்கு ரூ. 20 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த பள்ளி, தகுதியான மாணவர்கலுக்கு அதன் சிறந்த கல்வி வாய்ப்புக்களை அணுகுவதை உறுதிசெய்ய உதவித்தொகை மற்றும் நிதி உதவியையும் வழங்குகிறதாம். இப்பள்ளியில் சில பணக்கார மற்றும் செல்வாக்குமிக்க குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் மற்றும் சினிமா பிரபலங்களின் குழந்தைகளும் படிக்கிறாரார்களாம்.
அதில் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் மகள் ஆரத்யா பச்சன், ஷாருக்கான் - கெளரி கான் மகன் அப்ராம், சைஃப் அலிகான் - கரீனா கபூர் மகன்கள் தைமூர் அலிகான் மற்றும் ஜெஹ் அலிகான் உள்ளிட்ட நட்சத்திரங்களின் குழந்தைகளும் படிக்கிறார்களாம்.
இதற்கு முன் நடிகை ஜான்வி கபூர், சுஹானா கான், குஷி கபூர், இப்ராஹிம் அலிகான், ஆர்யன் கான், சாரா டெண்டுல்கர், நைசா தேவ்கன், அனன்யா பாண்டே போன்றவர்களும் இப்பள்ளியில் படித்தவர்களாம்.